தமிழ்நாடு

செஸ் விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

DIN

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செஸ் விளையாடி மகிழ்ந்தார்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை (ஜுலை 28) தொடங்கும் நிலையில் நேரில் ஆய்வு செய்த முதல்வர் செஸ் விளையாடினார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 44வது தொடர் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நாளை (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில்  கலந்து கொள்ளவுள்ளனர்.   இதையொட்டி தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனி அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

இதன் தொடக்கவிழா நாளை (ஜூலை 28) மாலை, சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த விளையாட்டு இருக்கையில் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் செஸ் விளையாடினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT