தமிழ்நாடு

சுருளி அருவியில் குளிக்கத் தடை: பக்தர்கள் அதிர்ச்சி

DIN


கம்பம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் வியாழக்கிழமை ஆடி அமாவாசையன்று, பக்தர்கள் குளிப்பதற்கு கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் தடை விதித்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தேனி மாவட்டம், சுருளி அருவியில் ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வருவார்கள், அதுபோல வியாழக்கிழமை ஆடி அமாவாசையன்று வந்தனர்.

சுருளி அருவியில் குளிப்பதற்கு வனச்சரகத்தினர் அனுமதிக்காததால் காத்திருந்த பக்தர்கள்.

கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் அவர்களிடம் நுழைவு கட்டணம் ரூ.30 பெற்றுக்கொண்டு அனுமதித்தனர். ஆனால். அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்கவில்லை, இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர், நேரம் ஆக, ஆக கூட்டம் கூடியதால் வனத்துறையினரிடையே பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் குளிப்பதற்கு அனுமதித்தனர். இதனால் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT