தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட்: நடிகர் கமல்ஹாசன் குரலில் ஒலித்த தமிழர் பண்பாட்டு வரலாறு

DIN

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் குரலில் தமிழர் பண்பாட்டு வரலாறு வெளியாகியது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தொடக்க விழாவில் தமிழர் பண்பாட்டு வரலாறு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் குரலில் உருவான ஆடியோ வெளியிடப்பட்டது. இதில் கற்காலம், இரும்புகாலம் தொடங்கி சேரர்கள், சோழர்கள் மற்றும் பாண்டிய மன்னர்களின் வரலாறு, தமிழர் கலைகள் உள்ளிட்ட பல்வேறு  தகவல்கள் இடம்பெற்றிருந்தன. லேசர் வடிவில் அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழர் பண்பாட்டு வரலாறு காண்போரை கவர்ந்திழுத்தது. 

முன்னதாக பல்வேறு நாடுகளின் கொடி அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT