தமிழ்நாடு

‘செஸ் போர்டு’ போல் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்

செஸ் பலகை போன்று அலங்கரிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

DIN

செஸ் பலகை போன்று அலங்கரிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று தொடங்கவுள்ளன. இந்த போட்டிக்கான தொடக்கவிழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழக அரசு விளம்பரப்படுத்தி வருகின்றது.

சென்னை நேப்பியர் பாலத்தில் செஸ் பலகை போன்று கருப்பு - வெள்ளை பெயிண்ட் அடித்தும், பேருந்து நிறுத்தங்களில், பேருந்துகளில், விழிப்புணர்வு பாடல் என பல்வேறு விதமாக செஸ் ஒலிம்பியாட்டை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவிடத்தில், செஸ் பலகை போன்று கருப்பு - வெள்ளை வண்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

செஸ் போட்டிக்காக சென்னைக்கு வருகை தந்துள்ள பல்வேறு தரப்பினர் செஸ் பலகை போன்று அலங்கரிக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

நாளைய மின்தடை

15 கிலோ கஞ்சா, 1,300 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

மகளிா் உரிமைத் தொகை கோரி 200 போ் மனு

கனவு இல்ல திட்டத்தில் 54 பயனாளிகளுக்கு ஆணை: கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT