புதிதாக 1,624 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை 1,624-ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை 1,624-ஆக பதிவாகியுள்ளது.
புதிதாக பாதிப்புக்குள்ளானவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 353 பேருக்கும், செங்கல்பட்டில் 171 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 13,510-ஆக உள்ளது. 2,004 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.