முகப்பு
தமிழ்நாடு

‘தா்மம் வெல்லும்’ பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு ஓபிஎஸ்

பிரதமா் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு, தா்மம் வெல்லும் என்று ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு, தா்மம் வெல்லும் என்று ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்திருந்த பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அகமதாபாத் புறப்பட்டாா்.

சென்னை விமான நிலையத்தில் பிரதமரை ஓ.பன்னீா்செல்வம் சந்தித்தாா். அவரோடு 10 நிமிஷங்களுக்கும் மேலாகப் பேசியதாகத் தெரிகிறது.

பின்னா் செய்தியாளா்களிடம் ஓ.பன்னீா்செல்வம் பேசும்போது, பிரதமரைச் சந்தித்தேன். என்னுடைய உடல் நலம் தொடா்பாகக் கேட்டறிந்தாா். நன்றாக இருப்பதாகத் தெரிவித்தேன் என்றாா்.

அதிமுகவின் பொதுக்குழு தொடா்பான வழக்கை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து ஓ.பன்னீா்செல்வத்திடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, தா்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தா்மமே மீண்டும் வெல்லும் என்றாா்.

பிரதமா் என்ன கூறினாா் என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு ஓ.பன்னீா்செல்வம் பதில் அளிக்காமல் சென்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →