தமிழ்நாடு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: கோவை அரசுப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

கோவை அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

DIN

கோவை அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை சுகுணாபுரம் மைக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில்  ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வரும் பிரபாகரன், பாலியல் துன்புறுத்தல் செய்வதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்ச்சியாக, மாநகர உதவி காவல் ஆணையாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார், பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளியில் இருந்து மாணவிகள் அழுதபடி வெளியே வருவது அங்குகூடி இருந்தவர்களை வெகுவாக பாதித்தது. உடற்கல்வி ஆசிரியர் பிராபகரன் இந்த பள்ளிக்கு வந்து மூன்று நாட்களே ஆனது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

SCROLL FOR NEXT