இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் நூலிழையில் உயிர் தப்பித்த இரண்டு பெண்களின் பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்கள் குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த போது பின்புறமாக முரம்பு ஏற்றி வந்த லாரி இடதுபுறமாகத் திரும்பிய போது இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், லாரி இருசக்கர வாகனம் மீது முழுவதுமாக ஏறிய நிலையில் இரண்டு பெண்களும் சாலையின் இடதுபுறமாக விழுந்ததால் லாரியின் சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் உயிர்த்தப்பினர்.
இதையும் படிக்க | குறைந்து வரும் சா்க்கரை நோய் கண் பாதிப்புகள் மருத்துவ ஆய்வில் தகவல்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த குடியாத்தம் காவல் துறையினர் லாரிக்கு அடியில் சிக்கிய இரு சக்கர வாகனத்தை மீட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.