ஆம்பூர்: ஆம்பூரில் வசித்து வரும் பொறியியல் கல்லூரி மாணவரை மத்திய உளவுப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் நீலிக்கொல்லை மசூதி தெருவில் புது தில்லி மத்திய உளவுத்துறை (IB) போலீஸார் மற்றும் வேலூர் ஐ.பி., திருச்சி ஐ.பி., திருப்பத்தூர் கியூ பிரான்ச் போலீஸார் ஆம்பூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி மாணவரை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் இருந்த விலை உயர்ந்த 2 வெளிநாட்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நீலிக்கொல்லை மசூதி தெரு பகுதியைச் சேர்ந்த மீர்ஹிதாயாத்அலி மகன் அனஸ் அலி வயது (22) என்பவர் ஆற்காடு அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர் என்றும் இவர் வெளிநாட்டில் சிலருடன் தொடர்பில் இருந்ததாக வெளியான ரகசிய தகவலின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.