முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,500 கன அடியிலிருந்து 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 19,000 கன அடியிலிருந்து 22,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. மழையளவு 22.20 மி.மீ. பதிவாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →