தமிழ்நாடு

தமிழகத்தில் சாதி, மதக் கலவரங்கள் இல்லை: மு.க.ஸ்டாலின்

DIN


தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் சாதி, மதக் கலவரங்கள், துப்பாக்கிச்சூடுகள் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னையில் தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் நிகழ்ச்சி எழும்பூர் ராஜரத்தினம் திடலில் நடைபெற்றது. 

இதில் அனைத்து காவலர்களுக்கும் பொருந்தும் வகையிலான புதிய லச்சினையை முதல்வரிடம் வெங்கையா நாயுடு வழங்கினார். அதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவருக்கு நினைவுப் பரிசாக சதுரங்க அட்டையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 

தமிழகத்தில் காவலர் முதல் டிஜிபி வரையிலான காவல் துறையினர் கொடியை இனி தங்கள் சீருடையில் அணியவுள்ளனர். உத்தரப் பிரதேசம், தில்லி, மகாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீரைத் தொடர்ந்து  குடியரசுத் தலைவர் கொடியை தமிழகம் பெறுகிறது. குடியரசுத் தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு  13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் பெறுகிறது.

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக சாதிக் கலவரங்கள், மத மோதல்கள், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறைந்துள்ளன. தமிழக காவல் துறையின் செயல்பாடு முன்பை விட அதிக அளவு பாராட்டைப் பெற்று வருகிறது. காவல் நிலைய மரணங்களே இல்லை என சொல்லவிலை. ஆனால் காவல் நிலைய மரணங்கள் குறைந்துள்ளன. 

2018ஆம் ஆண்டு 21 ஆக இருந்த காவல் நிலைய மரணங்கள், 2021-ல் 4 ஆக குறைந்துள்ளது. காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை காவல் துறையினர் ஏற்படுத்த வேண்டும். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடக்கூடாது. 

காவல் துறையில் முதல்முதலின் பெண்களை நியமனம் செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. காவல் துறையில் தற்போது ஒரு டிஜிபி, 3 ஏடிஜிபி, 14 ஐஜி, 20 ஆயிரம் காவலர்கள் பெண்களாக உள்ளனர்.

தமிழக அரசு சாபில் டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கப்படும். குடியரசுத் தலைவர் கொடியை பெற்றதால் தமிழக காவல் துறை உயர்ந்த அங்கீகாரத்தைப் பெறுகிறது எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT