தமிழ்நாடு

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைப்பு!

சென்னையில், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ரூ.134 குறைக்கப்பட்டுள்ளது. 

DIN


 
சென்னையில், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ரூ.134 குறைக்கப்பட்டுள்ளது. 

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளை, வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் ரூ.2,508க்கு விற்பனையாகி வந்த வணிகப் பயன்பாட்டிற்கான சமயைல் எரிவாயு உருளை விலையை  எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளன.
 
அதன்படி, 19 கிலோ எடைக்கொண்ட உருளை ஒன்றுக்கு ரூ.134 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.2,373 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றம் எதுவுமில்லாமல் ரூ.1018.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT