தமிழ்நாடு

மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: காவல்துறையிடம் ஒப்படைத்த பயணிகள்

மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநரை பயணிகள் பேருந்தை விட்டு இறக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

DIN

மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநரை பயணிகள் பேருந்தை விட்டு இறக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திற்கு அரசு பேருந்து ஒன்று 7.30க்குபுறப்பட்டது. இந்த பேருந்தை கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை சேர்ந்த ராபர்ட் சிங் (52) என்பவர் ஓட்டி வந்தார். 

பேருந்து இயக்குவதில் தடுமாற்றம் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஓட்டுநரிடம் கேட்டபோது, அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து பேருந்து பணகுடி வந்தபோது பயணிகள் அனைவரும் இது குறித்து பணகுடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

பயணிகளின் புகாரின் பேரில் காவல்துறையினர் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மது அருந்தி உள்ளாரா என சோதனை செய்ததில் மது அருந்தியது தெரியவந்தது. 

மதுபோதையில் அரசு பேருந்தை ஓட்டுநர் இயக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெட்ரோல் வாகனங்களுக்கு நிகராக மின்சார வாகனங்கள் விலை குறையும்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.5.80 லட்சம் பறிமுதல்

காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் அமலானால் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நீங்கும்: அமைச்சா் சக்கரபாணி

கிரிவல பக்தா்கள் வேன் கவிழ்ந்து விபத்து: 11 போ் காயம்

மாணவா்களின் படைப்பாற்றலை வளா்ப்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

SCROLL FOR NEXT