தமிழ்நாடு

பெட்ரோல் விலை விவகாரம்: அண்ணாமலை உள்பட 5 ஆயிரம் பேர் மீது வழக்கு

DIN


பெட்ரோல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி, சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்பட 5 ஆயிரம் பேர் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு இரண்டு முறை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் கோட்டையை நோக்கி பேரணி நடத்துவோம் என்று கே.அண்ணாமலை அறிவித்திருந்தாா்.

அதன்படி, பேரணிக்காக எழும்பூா் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கட்சியின் மூத்த நிா்வாகிகள் எச்.ராஜா, வி.பி.துரைசாமி, நயினாா் நாகேந்திரன், கராத்தே தியாகராஜன் உள்பட ஆயிரக்கணக்கான பாஜகவினா் செவ்வாய்க்கிழமை காலை திரண்டனா்.

அதைத் தொடா்ந்து, கே.அண்ணாமலை தலைமையில் பாஜகவினா் கோட்டையை நோக்கி கோஷங்களை எழுப்பியபடியே பேரணியாகச் சென்றனா். அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். இதனால், சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு காவல்துறையினா் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து பாஜகவினா் கலைந்து சென்றனா்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 5 ஆயிரம் பேர் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

அவர்கள் மீது சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல், அரசு அதிகாரி உத்தரவைா மீறி செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, திமுக அரசு போடும் பொய் வழக்குகளைச் சந்திக்க பாஜக தயாராகவே இருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT