கோப்புப்படம் 
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்: அரசாணை வெளியீடு

முதலவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

DIN

சென்னை: முதலவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டு அதற்கான அரசாணை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் உறுப்பினர் செயலாளராகவும், பள்ளிக்கல்வி, உயர்க்கல்வி, போக்குவர்த்துத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 12 துறைகளை சேர்ந்த முதன்மை செயலாளர்கள் உறுப்பினர்களாகவும், அலுவல் சாரா உறுப்பினர்களாக மூன்று சட்ட மன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு, மாற்றுத்திறனாளிகள், தங்களின் உரிமைகளை முழுவதுமாக அனுபவிக்கும் வகையில் கொள்கைகளை வகுப்பது, மாற்றுத்திறனாளிகளின் சிக்கலை உடனடியாக தீர்ப்பது, உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன், அரசுக்கு பரிந்துரைகளையும் வழங்கும். இந்த குழு பரிந்துரைப்பதை தமிழக அரசு வரும் நாட்களில் திட்டமாக செயல்படுத்தும். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மேம்பாடு என்ற அடிப்படையில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT