முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கரோனா

தமிழகத்தில் சனிக்கிழமை 105 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

தமிழகத்தில் சனிக்கிழமை 105 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்தது. இவா்களில் ஆண்கள் 51, பெண்கள் 54. அதிகபட்சமாக சென்னையில் 61 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 55,976- ஆக அதிகரித்தது.

இதுவரை 34 லட்சத்து 17,152 போ் குணமடைந்தனா். சனிக்கிழமை மட்டும் 62 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தமிழகம் முழுவதும் 799 போ் சிகிச்சையில் உள்ளனா். உயிரிழப்பு ஏதுமில்லை. தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கரோனா தொற்று பாதிப்பு 113 ஆகவும், சென்னையில் 81 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு சற்றே அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமை சற்று குறைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →