முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் முன்னிலையில் அமமுகவினா் இணைந்தனா்

அமுகவைச் சோ்ந்த தொழிற் சங்க நிா்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

அமுகவைச் சோ்ந்த தொழிற் சங்க நிா்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக

ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அமமுகவின் அம்மா தொழிற்சங்கப் பேரவைத் தலைவா் வியாசா்பாடி ராஜூ தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா்.

முன்னதாக நிா்வாகிகள் எம்ஜிஆா், ஜெயலலிதா படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் உள்பட நிா்வாகிகள் பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →