தமிழ்நாடு

தமிழக புராதன சிலைகளை மீட்டெடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழிசை

DIN

தமிழக புராதன சிலைகளை மீட்டெடுத்த பிரதமருக்கு மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகியிடம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துக்கொண்டார். 

இதுகுறித்து புதுச்சேரி ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அரசாங்க திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான பல்வேறு ஆலோசனை கூட்டங்களையும் நடத்தியதற்கு மத்திய அமைச்சருக்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

மேலும் சந்திப்பின் போது  வெளியுறவுத்துறை சார்பில் இலங்கை தமிழர்களுக்கான உதவிகள் பற்றியும், புதுச்சேரியில் நலிவடைந்த கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவது பற்றியும் மற்றும் பல மத்திய அரசு சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவது பற்றியும் புதிய திட்டங்கள் கொண்டு வருவது பற்றியும் விவாதித்தார்.

மேலும் மத்திய அமைச்சர் பேசும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தமிழக மக்களின் உணர்வுகளோடு ஒன்றிய தமிழக புராதன சிலைகளை மீட்டெடுத்து  ஒப்படைத்ததற்கு மத்திய இணை அமைச்சர் வாயிலாக பிரதமர் நரேந்திரமோடிக்கு  நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். 

அப்போது மத்திய இணை அமைச்சர் மத்திய அரசு, தமிழக புராதன சிலைகளை மீட்க  எவ்வளவு கடுமையான முயற்சிகள் மேற்கொண்டது என்பது பற்றியும், சிலைகளை தில்லியில் ஒப்படைக்கும் போது தமிழக மக்களுக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உதவ முடிந்ததே என்ற உணர்வை மகிழ்ச்சியோடு ஆளுநரிடம் பகிர்ந்து கொண்டார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT