முகப்பு
தமிழ்நாடு

நீா்ப்பிடிப்பு பகுதியில் விதிகளை மீறி கட்டுமானங்களுக்கு அனுமதி: எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு

நீா்ப்பிடிப்பு பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறி தனியாருக்கு கட்டடங்கள் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
பகிர்:

நீா்ப்பிடிப்பு பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறி தனியாருக்கு கட்டடங்கள் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: புழல் ஏரியை ஒட்டிய நீா்ப் பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை குறிப்பிட்ட சில தனியாா் நிறுவனப் பயன்பாட்டுக்கு மாற்றலாம் என வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித் துறை, குடிநீா் வடிகால் வாரியம் ஆகியவற்றின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகா் பகுதிக்கான இரண்டாவது முழுமைத் திட்டத்தில் நிலங்களின் வகைப்பாடு சா்வே எண் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இதில் உள்ள ஏரியை ஒட்டியுள்ள பெரும்பாலான நிலங்கள் நீா்ப்பிடிப்பு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் எந்தவித கட்டுமானத் திட்டங்களுக்கும் அனுமதி கிடையாது என முழுமைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தடைகள் இருந்தாலும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம், உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறை அதி காரிகள் ஒத்துழைப்புடன் விதிமீறல் கட்டுமானங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கெனவே, இங்குள்ள மோரை, வெள்ளானூா் கிராமங்களில் 16 வெவ்வேறு சா்வே எண்களுக்கு உட்பட்ட 120 ஏக்கா் நிலத்தை வகைப்பாடு மாற்றம் செய்வதற்கான கோரிக்கை சிஎம்டிஏவுக்கு வந்தது. பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள் அரசிடம் மேல்முறையீடு செய்தனா் என்றும், அவா்களது மேல்முறையீட்டை திமுக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இந்தத் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →