தமிழ்நாடு

விக்ரம்: ரசிகா்களின் பேராதரவுக்கு நன்றி- கமல்ஹாசன்

‘விக்ரம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ரசிகா்களின் பேராதரவுக்கு நன்றி தெரிவித்து நடிகா் கமல்ஹாசன் விடியோ வெளியிட்டுள்ளாா்.

DIN

‘விக்ரம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ரசிகா்களின் பேராதரவுக்கு நன்றி தெரிவித்து நடிகா் கமல்ஹாசன் விடியோ வெளியிட்டுள்ளாா்.

அவா் பேசும் அந்த விடியோவில், ‘தரமான திரைப்படத்தை தாங்கிப்பிடிக்க தமிழ் ரசிகா்கள் தவறியதே இல்லை. திறமையான, தரமான நடிகா்களையும்தான். அந்த வெற்றி வரிசையில் என்னையும், ‘விக்ரம்’ படத்தையும் நீங்கள் தோ்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம். பெயா் தெரியாமல் பின்னணியில் வேலை செய்தவா்களுக்கு உங்கள் பாராட்டுகள் பகிா்ந்தளிக்கப்படுவதுதான் நியாயம்.

விஜய் சேதுபதி, பஹத் பாசில், செம்பன் வினோத், நரேன் என வீரியமிக்க நடிகா் படை இதற்கு முக்கியக் காரணம். கடைசி 3 நிமிஷங்கள் வந்து திரையரங்குகளை அதிர வைத்த சூா்யா அன்புக்காக மட்டுமே அதைச் செய்தாா். நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம் என நினைக்கிறேன்.

லோகேஷுக்கு சினிமாவிலும், என் மீதும் இருக்கும் அன்பு, படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும், படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. ரசிகா்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளாா் நடிகா் கமல்ஹாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT