முகப்பு
தமிழ்நாடு

அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

அரசுப் பள்ளிகளில் அல்லாமல், அங்கன்வாடி மையங்களுக்கு எல்கேஜி, யுகேஜி எனப்படும் மழலையர் வகுப்புகள் மாற்றப்பட்டது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

Updated On : 8 ஜூன், 2022 at 12:41 PM
அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை விளக்கம் (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:58 PM


சென்னை: அரசுப் பள்ளிகளில் அல்லாமல், அங்கன்வாடி மையங்களுக்கு எல்கேஜி, யுகேஜி எனப்படும் மழலையர் வகுப்புகள் மாற்றப்பட்டது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த மழலையா் வகுப்புகள் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) அருகிலுள்ள அங்கன்வாடி மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கூறினார்.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

Advertisement

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இருந்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 

அங்கன்வாடி மையம் அருகில் எங்கு உள்ளதோ, அங்கே குழந்தைகளைச் சோ்த்துக் கொள்ளலாம். இதில் பணியாற்றிய ஆசிரியா்கள் ஏற்கெனவே இருந்தபடி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு முழுமையாகப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என்று அமைச்சா் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அங்கன்வாடி மையத்துக்கு மழலையர் வகுப்புகள் மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதால், தற்காலிக அடிப்படையில் மழலைர் பள்ளிகளுக்கு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கன்வாடிகளில் மழலையர் பள்ளிகள் இயங்கும். எனவே இனி மழலையர் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை அங்கன்வாடி மையங்கள் மூலமாகவே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களால் மழலையர் வகுப்புகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதில் புரிதல் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.