கம்பம் செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 
தமிழ்நாடு

கம்பத்தில் செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தேனி மாவட்டம், கம்பத்தில் தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு  பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN


கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு  பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பத்தில் தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்ணகு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 3 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் புதன்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது, இரண்டாம் நாள் வியாழக்கிழமை நவக்கிரக ஹோமம், 108 திரவியாகுதி ஹோமம் நடைபெற்றது, மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை நான்காம் கால பூஜையுடன்  தொடங்கி விமானம் மற்றும் ஸ்ரீ செல்லாயி அம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ பாலநாகம்மாள், ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீ காலபைரவர், ஸ்ரீ கருப்பசாமி ஆகிய சுவாமிகளுக்கு ஜீரனோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஏராளமான ஆண், பெண் மற்றும் பொதுமக்கள், தேவேந்திர குல வேளாளர் உறவின்முறையினர் கலந்துகொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர், கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.

கும்பாபிஷேக சர்வ சாதகங்களை கோம்பை கே.செந்தில் சிவாச்சாரியார் தலைமையில் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யோலோ டீசர்!

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

வீட்டுக் காப்பீட்டை அறிமுகப்படுத்தும் போன்பே!

உத்தரகண்ட்: தொடரும் நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!

SCROLL FOR NEXT