முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 200-ஐ தாண்டியது தினசரி பாதிப்பு

தமிழகத்தில் கரோனா தினசரி பாதிப்பு 200-ஐ தாண்டியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

தமிழகத்தில் கரோனா தினசரி பாதிப்பு 200-ஐ தாண்டியுள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 219 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 129, செங்கல்பட்டில் 41 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

இதனால் மொத்த பாதிப்பு 34,56,916-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 137 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.   

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,17,732-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 13,180 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 1,159 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, முகக் கவசம், தனி நபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறும் பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.