பாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!
கேரளத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஸ்மிதா சுந்தரேசன் பாஜகவில் இன்று இணைந்தார்.
கேரளத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன் பாஜகவில் இன்று (மார்ச் 22) இணைந்தார்.
கேரளத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கேரளத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஸ்மிதா சுந்தரேசன், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இன்று (மார்ச் 22) இணைந்துள்ளார்.
Advertisement
Advertisement
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சுந்தரேசனின் மகளான ஸ்மிதா, சிபிஐ(எம்) உறுப்பினராகவும் வர்கலா பஞ்சாயத்து கவுன்சிலராக இருந்தவர்.
தற்போது அந்தப் பொறுப்பை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ள ஸ்மிதாவை, கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், மாநில தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இது தொடர்பாக ஸ்மிதா சுந்தரேசன் பேசியதாவது:
''மக்கள் மத்தியில் சிபிஎம் கட்சி மதிப்புகளை இழந்து வருவதே, நான் பாஜகவில் இணைந்ததற்கான முதன்மையான காரணம். இதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடியின் சமரசமற்ற வளர்ச்சிப் பணிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இது மற்றொரு காரணம்'' எனக் குறிப்பிட்டார்.
CPI(M) leader Smitha Sundaresan on Sunday joined the BJP
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.