முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,753 கன அடியாக சரிந்தது

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து  குறைந்து வருகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:47 PM
மேட்டூர் அணை
பகிர்:

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து  குறைந்து வருகிறது.

அணைக்கு வெள்ளிக்கிழமை காலை 7,605 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இன்று சனிக்கிழமை காலை காலை நீா்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு  5,753 கனஅடியாகவும் குறைந்துள்ளது.

நீர்வரத்து குறைந்து வருவதால் வெள்ளிக்கிழமை காலை 114.95 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று சனிக்கிழமை காலை 114.57 அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 85.07 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →