பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித் துறை சொல்லும் அறிவுரை 
தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித் துறை சொல்லும் அறிவுரை

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 13ஆம் தேதி திறக்கப்படவிருக்கும் நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டிருக்கிறது.

DIN


சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 13ஆம் தேதி திறக்கப்படவிருக்கும் நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தில் வரும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அனைத்துப் பள்ளிகளையும் தூய்மைப்பணிகளை முடித்து மாணவர்களை வரவேற்க தயார்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் மின் இணைப்புகளில் மின் கசிவு, மின் கோளாறுகள்  ஏதேனும் இருக்கிறதா என்று என்று சோதனை நடத்தி, அவ்வாறு இருந்தால் சீர் செய்ய வேண்டும்.

சத்துணவுக் கூடங்களை சுத்தப்படுத்தி, சுகாதாரமாண உணவு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகள் திறந்ததும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட நூல்கள் பெறப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் முறையான சோதனைக்கு உள்படுத்தப்பட்டு, தகுதிச் சான்றிதழ் பெற்ற பிறகே மாணவ, மாணவிகளை அழைத்து வரப் பயன்படுத்தப்பட  வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT