தேரோட்டத்தை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர்கள். 
தமிழ்நாடு

புதுச்சேரி திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம்: ஆளுநர், முதல்வர் வடம்பிடித்து தொடங்கி வைப்பு

புதுச்சேரி  மாநிலம், வில்லியனூரில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் திருக்கோயில் திருத்தேரோட்ட உற்சவம் சனிக்கிழமை காலை 7.30 மணி அளவில் தொடங்கி நடைபெறுகிறது.

DIN

புதுச்சேரி  மாநிலம், வில்லியனூரில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் திருக்கோயில் திருத்தேரோட்ட உற்சவம் சனிக்கிழமை காலை 7.30 மணி அளவில் தொடங்கி நடைபெறுகிறது.

தேரோட்டத்தை புதுவை துணை நிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன்,  முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம்,  வேளாண் அமைச்சர் தேனி சி. ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சிவா உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து திருத்தேர் வீதி உலாவினை தொடங்கி வைத்தனர்.

சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு வழிபட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர்.

எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினர், அதிகாரிகள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

திருத்தேரில் திருக்காமேஸ்வரர், தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனையடுத்து கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT