FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

6 பிப்ரவரி 2024, 6:17 pm IST
கோப்புப்படம்
பகிர்:

கும்பகோணம்: நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததாவது:

கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ஆம் தேதி (நாளை மறுநாள் ) பள்ளிகள் அனைத்தும் திட்டமிட்டபடி திறக்கப்படும்.  பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்று  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் வரும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அனைத்துப் பள்ளிகளையும் தூய்மைப்பணிகளை முடித்து மாணவர்களை வரவேற்க தயார்படுத்த வேண்டும்  தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் மின் இணைப்புகளில் மின் கசிவு, மின் கோளாறுகள்  ஏதேனும் இருக்கிறதா என்று என்று சோதனை நடத்தி, அவ்வாறு இருந்தால் சீர் செய்ய வேண்டும். சத்துணவுக் கூடங்களை சுத்தப்படுத்தி, சுகாதாரமாண உணவு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments