சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் 
தமிழ்நாடு

சுவாமிமலையில் வைகாசி விசாகம்: பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம்

சுவாமிமலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

DIN


சுவாமிமலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சண்முகர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து  சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு யாகம் நடைபெற்றது.

மேலும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT