வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். பைபாஸ் சாலையில் டீ கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், குடும்பத்தோடு காரில் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திங்கள்கிழமை வாணியம்பாடி நோக்கி வந்துகொண்டிருந்த போது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே அகரம்சேரி விநாயகபுரம் பகுதியில் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள நிலத்தில் புகுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணித்த 60 வயது கர்பகம் என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 3 குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிகொண்டா காவல் துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இவ்விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்துக்கு வாய்ப்பில்லை: ப.சிதம்பரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.