தமிழ்நாடு

10ஆம் வகுப்பில் அமர்ந்து தமிழ்ப் பாடத்தைக் கவனித்தார் முதல்வர்

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வடகரையில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 10ஆம் வகுப்பு மாணவர்களுடன் இருக்கையில் அமர்ந்து தமிழ் ஆசிரியை நடத்தும் பாடத்தைக் கவனித்தார்.

தமிழகம் முழுவதும் இன்று கோடை விடுமுறைக்குப் பிறகு 1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, அனைத்து மாணவ, மாணவிகளும் உற்சாகத்தோடு பள்ளிக்குச் சென்றனர்.

அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் மாணவ மாணவிகளை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் இன்று காலை நேரில் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டனர்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் வடகரையில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 10ஆம் வகுப்பு மாணவர்களுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து தமிழ் ஆசிரியை நடத்தும் பாடத்தைக் கவனித்தார்.

தமிழ் ஆசிரியை பாடம் நடத்தும் முறையை மாணவர்களுடன் மாணவர்களாக இருக்கையில் அமர்ந்து கவனித்த முதல்வருடன், அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோரும் வகுப்புக்குள் இருக்கையில் அமர்ந்து பாடத்தைக் கவனித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT