தமிழ்நாடு

மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி (விடியோ)

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மடப்புரம் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

மடப்புரம் காளி கோயில் உதவி ஆணையர் விஸ்வமுத்து மற்றும் சிவகங்கை அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் சிவராம்குமார் ஆகியோர் தலைமையிலும் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பழனியப்பன் முன்னிலையிலும் மதுரையில் இருந்து ஐயப்ப சேவா சங்க உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இன்று பௌர்ணமி நாளை முன்னிட்டு கோயிலில் பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மடப்புரம் காளியை தரிசனம் செய்தனர்.

கோயிலில் நண்பகல் நடந்த உச்சிகால பூஜையில் அம்மனை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT