தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 476 பேருக்கு கரோனா: சென்னையில் 221

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 476 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 332 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 

அதில், இன்று புதிதாக 476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,58,445-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பல வாரங்களுக்கு பின்னர் கரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இதனால் மொத்த உயிரிழப்பு 38,026 ஆக உள்ளது. 

இன்று ஒரு நாளில் மட்டும் 169 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,18,481-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171-ல் இருந்து 221-ஆக அதிகரித்துள்ளது.  செங்கல்பட்டு 95, கோவை 26, நீலகிரி 23, காஞ்சிபுரம் 21, கன்னியாகுமரி, திருவள்ளூரில் தலா 20 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல வாரங்களுக்கு பின்னர் கரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT