தமிழ்நாடு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்வு

DIN

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு 14% இருந்து 28% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் பணியாற்றும் 19,658 விற்பனையாளர்கள், 2,852 கட்டுநர்கள் பயன்பெறுவர்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு கோரி ரேஷன் கடை ஊழியர்கள் போரட்டம் நடத்திய நிலையில் அரசு நடவடிக்கை எடுத்து அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT