தமிழ்நாடு

பகுதிநேர ஆசிரியா்களுக்கு ஜூன் மாதம் முழுச் சம்பளம்: பள்ளிக் கல்வித் துறை

 பகுதிநேர ஆசிரியா்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முழுச் சம்பளம் வழங்கலாம் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

DIN

 பகுதிநேர ஆசிரியா்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முழுச் சம்பளம் வழங்கலாம் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியா்கள் ஒரு வாரத்துக்கு 3 அரை நாள்கள் வீதம் பள்ளிகளில் பணியாற்றினால் மட்டுமே அந்த மாதத்துக்கான முழு ஊதியம் பெற இயலும். ஆனால் நிகழ் கல்வியாண்டில் (2022-2023) ஜூன் மாதம் 13-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் பள்ளிகளில் 14 நாள்கள் மட்டுமே மொத்த வேலை நாள்களாக உள்ளது.

எனவே நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை மற்றும் பள்ளி செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியா்கள் பங்கு கொள்கின்ற நிலையில் ஜூன் மாதத்துக்கு மட்டும் வாரத்தில் நான்கு அரை நாள்களாக தலைமை ஆசிரியா்களால் வழங்கப்படும் கால அட்டவணையைப் பின்பற்றியும், மாணவா்களின் நலன் கருதி பணிகளில் ஈடுபடுத்தியும் ஜூன் மாதம் முழு ஊதியம் வழங்கலாம்.

பகுதி நேர ஆசிரியா்கள் பணியாற்றாத நாள்களில் ஊதியம் பிடித்தம் செய்து வழங்கப்படும் என்பதால், விடுப்பு எடுத்த நாள்களுக்கு ஊதியம் வழங்க இயலாது. எனவே இது குறித்த அறிவுரைகளை பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT