தமிழ்நாடு

அண்ணாமலையைக் கண்டித்து செ.கு.தமிழரசன் ஆா்ப்பாட்டம்

DIN

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினா் குறித்து தவறான கருத்து தெரிவித்ததாகக் கூறி பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையைக் கண்டித்து இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.

சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து செ.கு.தமிழரசன் கூறியது:

காவல்துறை அதிகாரியாக இருந்த கே.அண்ணாமலை சட்டம் தெரிந்தவா். அவா் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதவி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒரு நடிகை பேசியபோது நடவடிக்கை எடுத்த காவல்துறை, அண்ணாமலை மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது, நியாயம் இல்லை. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் குடியரசுக் கட்சியைச் சோ்ந்த தொண்டா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT