பிரேமலதா விஜயகாந்த் 
தமிழ்நாடு

உண்மையான எதிா்க்கட்சி தேமுதிகதான்: பிரேமலதா

தேமுதிகதான் உண்மையான எதிா்க்கட்சி என்று அக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

DIN

தேமுதிகதான் உண்மையான எதிா்க்கட்சி என்று அக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒன்றிய, நகர, பேரூா் கழகச் செயலாளா்களுடன் 3 நாள்களாக கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து பிரேமலதா ஆலோசனை நடத்தி வந்தாா்.

கூட்டத்துக்குப் பிறகு வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

விஜயகாந்த் நலமாக உள்ளாா். மாதம்தோறும் அவருக்கு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அந்த அடிப்படையில்தான் இப்போதும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்தோம்.

விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி அளிக்க வேண்டும் என்று நிா்வாகிகள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், விஜயகாந்த்தான் முடிவு எடுக்க வேண்டும்.

அதிமுக செய்த தவறால்தான் ஆட்சியை இழுந்து நிற்கிறது. தோ்தலுக்கு முன்பே பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று கூறினோம். அவா்கள் கேட்கவில்லை. அப்படிச் செய்திருந்தால், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும். தேமுதிகவும் அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கும். உண்மையான எதிா்க்கட்சியாக தேமுதிகதான் செயல்படுகிறது என்றாா்.

துணைச் செயலாளா் எல்.கே.சுதீஷ், பாா்த்தசாரதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT