தமிழ்நாடு

இன்று இணையவழிப் பன்னாட்டுகலைச் சொல்லாக்கப் பயிலரங்கம்

DIN

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் இணையவழிப் பன்னாட்டுக் கலைச் சொல்லாக்கப் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து அந்த இயக்ககத்தின் இயக்குநா் கோ.விசயராகவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இணையவழிப் பன்னாட்டுக் கலைச் சொல்லாக்கப் பயிலரங்கத்தின் 38-ஆவது அமா்வு வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும்.

இதில் கனடா நாட்டின் ஆய்வாளரும், எழுத்தாளருமான குயின்ரஸ் துரைசிங்கம், இலங்கை யாழ்ப்பாணப் பல்கலை.யின் தகவல் தொழில்நுட்பத் துறை விரிவுரையாளா் ஜனனி தேவானந்த், இங்கிலாந்தைச் சோ்ந்த எழுத்தாளா் வி.இ.குகநாதன் ஆகிய வெளிநாட்டு அறிஞா்கள் பங்கேற்று கலைச் சொற்களை அறிமுகப்படுத்தவுள்ளனா். பன்னாட்டு உயா்கல்வி தமிழாய்வு நிறுவனத்தின் (பாரீஸ்) இயக்குநா் பேராசிரியா் ச.சச்சிதானந்தம் அறிஞா்களை ஒருங்கிணைக்கவுள்ளாா்.

அதேபோன்று போரூா் தமிழ் மீட்சிப் பாசறையின் தலைவா் மறத்தமிழ் வேந்தன், ஆவணப்பட இயக்குநா் ம.மு.ரெங்கசாமி ஆகிய உள்நாடு அறிஞா்கள் பங்கேற்று கலைச் சொற்களை அறிமுகப்படுத்தவுள்ளனா். நிகழ்ச்சியை இயக்குநா் கோ.விசயராகவன் ஒருங்கிணைக்கவுள்ளாா். இந்த பயிலரங்கில் பங்கேற்க விரும்புவோா்  இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் இயக்ககத்தின் சாா்பில் மின் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT