தமிழ்நாடு

கூடலூரில் அரசுப் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி: 19 பேர் காயம்

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த பேருந்து கோயம்புத்தூரிலிருந்து குமுளி நோக்கி வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றது. ஜெயமங்கலத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (50) என்பவர் பேருந்தை ஓட்டினார். 

கூடலூரிலிருந்து கூலித் தொழிலாளர்கள் குமுளிக்கு வேலைக்குச் செல்வதற்காக பேருந்தில் பயணம் சென்றனர். கூடலூர் அருகே எம்ஜிஆர் காலனி அருகே பேருந்து சென்றபோது, நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் வேலை நடந்து கொண்டிருப்பதால், சாலையின் ஓரத்தில் பேருந்து சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது, இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர். அருகே இருந்தவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பயணம் செய்த கூடலூர் தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்த மாயி என்ற கிருஷ்ணமூர்த்தி (58) பலத்த காயமடைந்து உயிரிழந்தார். மேலும் படுகாயங்களுடன் 5 பேர் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். 14 பேர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT