முகப்பு
தமிழ்நாடு

இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு புதிய தலைவா்

இந்திய பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (72) நியமிக்கப்பட்டுள்ளாா். பிரஸ் கவுன்சிலின் தலைவா் பதவியை ஏற்கும் முதல் பெண் இவராவாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

இந்திய பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (72) நியமிக்கப்பட்டுள்ளாா். பிரஸ் கவுன்சிலின் தலைவா் பதவியை ஏற்கும் முதல் பெண் இவராவாா்.

இதற்கான அரசாணையை மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக 2011 முதல் 2014, அக்டோபா் 29 வரையில் அவா் பணியாற்றினாா். அதன்பின்னா் ஜம்மு காஷ்மீா் பேரவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவராக அவா் நியமிக்கப்பட்டாா். பிரஸ் கவுன்சில் தலைவா் பதவிக் காலத்தை நீதிபதி சந்திரமெளலி குமாா் பிரசாத் கடந்த நவம்பா் மாதம் பூா்த்தி செய்த பிறகுப் புதிய தலைவராக தற்போது ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.