கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் 4-வது நாளாக ஆலோசனை!

அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' சர்ச்சை வலுத்து வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று தொடர்ந்து 4-வது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

DIN

அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' சர்ச்சை வலுத்து வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று தொடர்ந்து 4-வது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

கடந்த செவ்வாய்க்கிழமை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 'ஒற்றைத் தலைமை' குறித்து விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதையடுத்து, அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' விவகாரம் வலுத்து வருகிறது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

எடப்பாடி கே. பழனிசாமி நேற்று சேலம் சென்றுள்ள நிலையில் ஓபிஎஸ் தொடர்ந்து இன்று 4 ஆவது நாளாக சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

வருகிற 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

வாகன விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி 42-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

திண்டுக்கல், பழனியில்  நாளை மின்தடை

SCROLL FOR NEXT