எம்.ஜி.எம். குழுமத்தில் சோதனையில் பல கோடி ரொக்கம் பறிமுதல்
சென்னை எம்.ஜி.எம். குழுமத்தில் வருமானவரித்துறை நடத்தி வரும் சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை எம்.ஜி.எம். குழுமத்தில் வருமானவரித்துறை நடத்தி வரும் சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை எம்.ஜி.எம். குழுமத்தில் வருமானவரித்துறை நடத்தி வரும் சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னையைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் எம்.ஜி.எம். குழுமம் வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித் துறையினா் கடந்த புதன்கிழமை முதல் சோதனை செய்து வருகின்றனா்.
சென்னை மயிலாப்பூா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வணிக அலுவலகம், சாந்தோமில் உள்ள உரிமையாளா் எம்.ஜி.எம். குழும உரிமையாளா் வீடு, எம்.ஜி.எம். எக்ஸ்போா்ட்ஸ் அலுவலகம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, ஹோட்டல்கள், வேளாங்கண்ணியில் உள்ள ஹோட்டல்கள் உட்பட 40 இடங்களில் சோதனை நடைபெற்றது.
மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் இச் சோதனை அந்த குழுமத்துக்குச் சொந்தமான 20 இடங்களில் நடைபெற்றது. 20 இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. சோதனையில், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், பல கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.