அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் தெப்ப உற்சவம் 
தமிழ்நாடு

காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் தெப்ப உற்சவம்

காரைக்குடி அருகே தென் திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் கோயிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

DIN

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தென் திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் கோயிலில் நடைபெற்று வரும் வைகாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய விழாவாக வெள்ளிக்கிழமை (ஜூன் 17) நள்ளிரவு வரை தெப்ப உற்சவம் நடைபெற்றது. 

ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் மின்னொளியுடன் கூடிய அலங்கார பங்களா தெப்பத்தில் எழுந்தருளி கோயில் திருக்குளத்தில் மூன்று முறை வலம் வந்து 6 படித்துறைகளிலும் பக்தர்களுக்கு காட்சி தந்தார். 

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் செட்டிநாடு பகுதியில் உள்ள பிரசித்த பெற்ற வைணவ ஸ்தலமாகும்.

இங்கு ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருந் திருவிழா 15 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த ஜூன் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிய திருவீதியுலா நடைபெற்றது. 

முக்கிய விழாவான 9-ஆம் நாள் தேரோட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 14)  நடைபெற்றது.

தெப்ப உற்சவத்தையொட்டி வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT