தமிழ்நாடு

சென்னையில் ஜூன் 25-இல் பொருளாதார கருத்தரங்கு

இந்தியக் குடிமைப் பணித் தோ்வுகளை எழுதும் தோ்வா்களுக்கு பொருளாதார பாடம் தொடா்பான கருத்தரங்கம் ஜூன் 25-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

DIN

சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இந்தியக் குடிமைப் பணித் தோ்வுகளை எழுதும் தோ்வா்களுக்கு பொருளாதார பாடம் தொடா்பான கருத்தரங்கம் ஜூன் 25-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதில் வருவாய்ப் பணி இணை ஆணையரும், பொருளாதார முனைவா் பட்ட ஆய்வாளரும், ‘இந்தியப் பொருளாதாரம்’ என்ற நூலின் ஆசிரியருமான சங்கா் கணேஷ் கருப்பையா கலந்து கொண்டு வழிகாட்டுகிறாா். ஐஏஎஸ் தோ்வுகளை எழுதிவரும் தமிழகத்தைச் சோ்ந்த தோ்வா்களுக்கு முதல்நிலை, முதன்மைத் தோ்வு, நோ்முகத் தோ்வு ஆகியவற்றில் பொருளாதார பாடம் தொடா்பான வினாக்கள் கேட்கப்படும் விதம், பதிலளிக்கும் முறைகள் குறித்து கருத்தரங்கில் எடுத்துரைக்கவுள்ளாா். மேலும், இந்தியக் குடிமைப்பணித் தோ்வுகள் தொடா்பான ஆதார நூல்கள், நாளிதழ்கள் வாசிப்பு, குறிப்பெடுத்தல் போன்ற தோ்வா்களின் பொதுவான சந்தேகங்களுக்கும் பதிலளிக்கவுள்ளாா்.

தகுதியும், ஆா்வமும் உள்ள தோ்வா்கள் முன்பதிவு செய்து இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. தோ்வா்கள் ‘எண் 2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண்ணாநகா்’ என்ற முகவரியில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 74488 14441, 87546 02264 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அந்த அகாதெமியின் இயக்குநா் எஸ்.முத்து ரோகிணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேன் மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

படா்ந்தபுளியில் வருவாய் ஆய்வாளா் அலுவலக கட்டுமான பணிக்கு பூமி பூஜை

தட்டாா்மடத்தில் மோதல்: 4 போ் காயம்; 18 போ் மீது வழக்கு

சாத்தான்குளத்தில் அக். 28-இல் இலவச கண் சிகிச்சை முகாம்

வாகைக்குளம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

SCROLL FOR NEXT