தமிழ்நாடு

காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களில் ஜூலை 9-ல் தேர்தல்

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தலை ஆணையம் தெரிவித்துள்ளது.  

DIN

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தலை ஆணையம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 30.04.2022 வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு 09.07.2022 அன்று தற்செயல் தேர்தல்களை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிக்கை 20.06.2022 அன்று வெளியிடப்படும். அன்றே வேட்பு மனு தாக்கல் துவங்கும். வாக்குப்பதிவு 09.07.2022 அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை 12.07.2022 அன்று நடைபெறும். 

498 ஊரக உள்ளாட்சிப் பதிவியிடங்களுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கும் என மொத்தம் 510 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறும். இப்பதவியிடங்களில் 34 பதவியிடங்கள் கட்சி அடிப்படையில் தேர்தல்கள் நடைபெறும். 
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கென 279 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கென 12 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களுக்கு வாக்குச்சீட்டுகளும் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

SCROLL FOR NEXT