பாமக நிறுவனா் ராமதாஸ் 
தமிழ்நாடு

மாணவர்களின் நலனே பல்கலையின் நோக்கமாக இருக்க வேண்டும்: ராமதாஸ்

அண்ணாமலை பல்கலைக்கழகத் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும், மாணவர்களின் நலனே பல்கலையின் நோக்கமாக இருக்க வேண்டும் என  பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

DIN


சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும், மாணவர்களின் நலனே பல்கலையின் நோக்கமாக இருக்க வேண்டும் என  பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில்,

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கான பருவத் தோ்வுகள் வரும் 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் காவல் உதவி ஆய்வாளா் தோ்வு 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதே தேதியில் பருவத் தோ்வுகளும் நடத்தப்படுகின்றன.

பட்டமேற்படிப்பு பயிலும் பல பட்டதாரிகள் உதவி காவல் ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பித்திருக்கின்றனா். காவல் உதவி ஆய்வாளா் என்பது அவா்களின் கனவுப் பணி. ஒரே நாளில் இரு தோ்வுகள் நடைபெறுவதால் எதை எழுதுவது, எதை விடுவது என்ற குழப்பத்திற்கு மாணவா்கள் ஆளாகியுள்ளனா்.

கல்வியின் நோக்கம் கனவுகளை எட்டிப்பிக்க உதவுவது தான். ஆனால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தோ்வு அட்டவணை காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு செல்ல விரும்புவோரின் கனவுகளை சிதைப்பதாக உள்ளது. தோ்வு அட்டவணையை மாற்ற பல்கலைக்கழக நிா்வாகம் மறுத்து விட்டது!

பல்கலைக்கழகத் தோ்வுகளை ஒரு வாரம் ஒத்திவைப்பதால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. மாணவா்கள் நலனே பல்கலைக்கழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். எனவே, பட்டமேற்படிப்புக்கான பருவத் தோ்வுகளை குறைந்தது ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு!

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT