ஆன்லைன் கடன் செயலியால் இளைஞர் தற்கொலை
சென்னையில் ஆன்லைன் செயலியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத இளைஞரின் படத்தை ஆபாசமாக சித்தரித்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னையில் ஆன்லைன் செயலியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத இளைஞரின் படத்தை ஆபாசமாக சித்தரித்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த இளைஞர் பாண்டியன் ஆன்லைன் செயலியில் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த கடனை திருப்பி செலுத்தாததால், பாண்டியனின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த ஆன்லை கடன் வழங்கும் நிறுவனம், வாட்ஸ்அப் மூலம் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து மனமுடைந்த இளைஞர் வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட பாண்டியன், ஆன்லைன் ரம்மியும் விளையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் கடன் செயலிகளால் ஏமாறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, கடந்த வாரம் தமிழக காவல்துறை இயக்குநர் விழிப்புணர்வு காணொலி வெளியிட்ட நிலையில், ஒருவர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.