முகப்பு
தமிழ்நாடு

ஜூன் 27-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் ஜூன் 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 ஜூன், 2022 at 10:41 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் ஜூன் 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும். பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேகதாது அணை விவகாரம், பருவ மழை முன்னெச்சரிக்கை, புதிய திட்டங்களுக்கான அனுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.