புதுப்பட்டினத்தில் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கமம்
புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு: புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2003-2004 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த முன்னாள் மாணவர்கள் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களுடன் பயின்ற நண்பர்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டதால் ஒருவரையொருவர் ஆரத் தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு சால்வை மற்றும் சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கி ஆசி பெற்றனர். பள்ளி வாழ்க்கை அனுபவங்களையும், நட்பின் வெளிப்பாட்டை பகிர்ந்து கொண்டு அவரவர் செய்யும் பணிகள், வேலைகள், தொழில்கள் குறித்துப் பேசியும் குடும்பங்களை அறிமுகப்படுத்திப் பேசினர். பின்னர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அனைத்து மாணவர்களும் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.