தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு: 'காவல் துறை முடிவெடுக்க உத்தரவு'

அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கில், காவல் துறை முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

DIN


அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கில், காவல் துறை முடிவெடுத்துக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக, காவல் துறையின் கேள்விகளுக்கு இன்று பிற்பகல் 1 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், அதிமுக அளிக்கும் பதில்களைப் பொறுத்து, பாதுகாப்பு அளிப்பது குறித்து காவல் துறை முடிவு எடுக்கலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க டிஜிபி, ஆவடி காவல் ஆணையா், திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டுமென  முன்னாள் அமைச்சரும், திருவள்ளூா் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு, நீதிபதி சதீஷ்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அதிமுகவினருக்கு காவல் துறை தரப்பிலிருந்து 26 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அந்த கேள்விகளுக்கு அதிமுக தரப்பிலிருந்து எந்தவித பதிலும் அளிக்கவில்லை என  வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் துறையின் கேள்விகளுக்கு பிற்பகல் 1 மணிக்குள் அதிமுக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், அதிமுக அளிக்கும் பதில்களைப் பொறுத்து பாதுகாப்பு வழங்குவது குறித்து காவல் துறை முடிவு செய்துகொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார். 

பாதுகாப்பு வழங்குவதாக முடிவு செய்யப்பட்டால், எந்ததரப்பு என்றெல்லாம் பார்க்கக்கூடாது எனவும், அனைத்து தரப்புக்கும் உரிய பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT